News February 2, 2026

கோவை: உங்க போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 21, 2026

கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

image

கோவை விமான நிலையத்தில் ‘புதிய உடான் யாத்ரி கபே’ உணவகத்தைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலைய விரிவாக்கத்திற்கு ₹2,136 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்த இந்நிகழ்வில், விரிவாக்கப் பணிகள் 2028-ல் நிறைவடைந்து, கோவை விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் என உறுதிபடத் தெரிவித்தார்.

News February 21, 2026

கோவையில் வசமாக சிக்கிய பெண்!

image

கோவை மாவட்டம் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வராணி, இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தெய்வநிதி என்ற பெண் செல்வராணியின் முகத்தில், பூச்சி மருந்தை தெளித்து முக்கால் பவுன் நகையை பறித்து சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த இரத்திபுரி காவல்துறையினர் தெய்வநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 21, 2026

ஊட்டி மலை ரயில் பயண கட்டணம் உயர்வு

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் பயண கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.175 ஆக இருந்த முன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.185 ஆகவும், ரூ.520 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.550 ஆகவும், ரூ.295 க்கு முன்பதிவு செய்த இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.310 ஆகவும், ரூ.600 ஆக இருந்த முதல் வகுப்பு கட்டணம் ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!