News August 31, 2025
கோவை: இலவச மின்சாரம் விண்ணப்பிப்பது எப்படி?

▶️கோவை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, ▶️அதன்பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும் ▶️இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கோவை வடமதுரை மின்வாரிய அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.SHARE பண்ணுங்க!
Similar News
News September 1, 2025
கோவை மாவட்டம் உருவான வரலாறு!

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் என பெயர் பெற்ற கூறப்படுகிறது .ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அதன் பின் 1866ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. கொங்கு மண்டலத்தின் இதயமென அழைக்கப்படுவது கோவை என்றால் மிகையாகாது.(SHARE பண்ணுங்க)
News September 1, 2025
ஆவின் பால் முகவர்கள் உரிமம் – புதுப்பிக்க அறிவிப்பு

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 635 சில்லறை பால் விற்பனை முகவர்களில் 333 பேர் மட்டுமே இதுவரை உரிமத்தை புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள முகவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 11-ந்தேதியிலிருந்து உரிமம் புதுப்பிக்காத முகவர்களுக்கு கமிஷன் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
ஆன்லைன் முதலீடு மோசடி: ரூ.71 லட்சம் இழந்த முதியவர்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த முருகேசன் (62) என்பவரிடம், சஞ்சய் ரெட்டி மற்றும் லாவண்யா ஆகியோர் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.71 லட்சத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் நேற்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.