News August 14, 2025
கோவை: இலவச பட்டா பெற இதை செய்யுங்கள்!

கோவை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 14, 2025
கோவையில் கொட்ட போகும் மழை

மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
News August 14, 2025
கோவையில் ₹1.65 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு

கோவை மக்களே சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மானியமாக ரூ.1,65,625/ வழங்கப்படும். இதற்கு தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம் என என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாா் தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)
News August 14, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.