News November 2, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
இந்திய துணை ஜனாதிபதி கோவை வருகை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் (நவம்பர்.4) செவ்வாய் அன்று கோவை மாவட்டத்திற்கு வருகிறார். இவர் பிலிச்சி கிராமம் ஒண்ணியபாளையத்தில் உள்ள எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள உள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5.55 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்து, 7.35 மணிக்கு ராய்ப்பூருக்கு புறப்படவுள்ளார்.
News November 2, 2025
கோவையில் இலவச Python பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Python பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 2, 2025
சிறப்பு ரயில் அறிவிப்பு

பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கோவை–மடார் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. கோவை–மடார் (06181) ரயில் (நவ.13 முதல் டிச.4) வரை வியாழன் அதிகாலை புறப்படும்; மடார்–கோவை (06182) ரயில் (நவ.16 முதல் டிச.7) வரை ஞாயிறு இரவு புறப்படும். மேலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.


