News March 22, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை: ஒருங்கிணைந்த நீதிமன்ற மெயிலுக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை நடத்தினர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின் இ-மெயில் அனுப்பிய நபர் யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 22, 2025
கோவை: விபத்தில் துடிதுடித்து பலி!

கோவை: காரமடை அடுத்துள்ள பிளிச்சி தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(22). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றிரவு(செப்.21) பெட்டதாபுரம் அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர அவரை மீட்டு மேட்டுப்பாளையம் ஜி.எச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 22, 2025
கோவை மாணவர்களுக்கு கல்விக் கடன்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன் குமார் வழங்கினாா். பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் இருந்தனர்.