News December 31, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு முதல் இன்று கைகளை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

கோவை: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா.. இத பண்ணுங்க

image

கோவை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0422-2449550 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)

News December 31, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கிளை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காந்திபுரத்தில் இருந்து 20, சிங்காநல்லூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 60, நீலகிரிக்கு 20 என 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் புத்தாண்டு முடிந்து மீண்டும் ஊர் திரும்ப 160 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News December 31, 2025

கோவையில் மொத்தமாக மாற்றம்

image

தமிழக காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மேற்கு மண்டலம் ஐஜியாக இருந்த செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த சரவணசுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!