News December 21, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (20.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
கோவை:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

கோவை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் <
News December 21, 2025
கோவை அருகே சோகம்: கிணற்றில் விழுந்து குழந்தை பலி

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே சின்னம நாயக்கன்பாளையம் பகுதியில் பீகார் மாநில தொழிலாளி மஜும்ன் 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News December 21, 2025
மருதமலைக்கு இப்படி செல்ல தடை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தாலும், வரும் 23ம் தேதி அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் டூவீலர்கள், கார்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளிலும் சென்று தரிசனம் செய்யலாம் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


