News December 19, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

கோவை: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!

image

கோவை இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான வீடு மதுக்கரையில் உள்ளது. இந்த வீட்டில் அவர், அவரது மகள், உறவினர் மகள் வசித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டரை வாகனத்தில் இறக்கிவிட வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணன், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 23, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், மையிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், சிட்ரா ஒரு பகுதி, கோல்ட்வின்ஸ் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை அடிவாரம், நாவவூர் பிரிவு, பொம்மணம்பாளையம், டாடா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 23, 2025

கோவை: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

image

கோவை மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான, 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த<> லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!