News December 17, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், ரங்கநாதபுரம், சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், சொக்கம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 20, 2025
கோவை இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்!

கோவை, கணபதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் ஜீவா, கடந்த 2024ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, இறந்த ஜீவா பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை படம் எடுத்த விவகாரத்தில், பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக அண்ணன் கார்த்திக் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.


