News December 17, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
கோயம்புத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 32 வயது பெண், கோவை போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கணவர் இறந்த பின், பெற்றோர் மறுமணத்துக்காக இணையதளத்தில் பதிவு செய்தனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார் என்பருடன் தொடர்பு ஏற்பட்டு பேசி வந்த நிலையில், அவர் பணம், நகை பெற்று ஏமாற்றிவிட்டார். அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றார்.
News December 22, 2025
செவிலியர் போராட்டத்திற்கு பாஜகவினர் ஆதரவு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக கைக்குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாஜக மாவட்ட தலைவர் ஜே.ரமேஷ்குமார் மற்றும் மாநில மருத்துவ பிரிவு செயலாளர் டாக்டர் பாபு ராஜேந்திரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
News December 22, 2025
“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!


