News January 31, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Similar News

News March 2, 2026

காரமடை அரங்கநாத சாமி கோயில் பற்றி சிறப்பு

image

காரமடை அருகே பசு தனியாக சென்று வருவதை கால்நடைகளை மேய்க்க கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் பசுவை பின் தொடர்ந்து சென்ற போது காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட இரத்தம் சொட்டியது. பின் சந்தன காப்பிட்டு பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டதாக கூறுப்படுகிறது. அன்று முதல் பெருமாளுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தப்படுகிறது. இன்றும் வெட்டுக்காயம் காணப்படுகிறது.

News March 2, 2026

FLASH: கோயம்புத்தூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா பகுதியில் உள்ள பழைய, புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (ம) காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

News March 2, 2026

கோவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

கோவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!