News September 30, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (30.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 30, 2025
கோவை: FREE.. வீடு கட்டப் போறீங்களா?

கோவை மக்களே, வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 30, 2025
பாஜக எம்பிக்கள் சென்ற கார் விபத்து

கரூரில் நடிகர் விஜயின் கட்சி கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பா.ஜ.க எம்.பிக்கள் ஹேமமாலினி, அனுராக் தாகூர்,
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்ற கார், சூலூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் மற்றொரு பாஜக நிர்வாகியின் கார் மீது மோதி சேதம் ஏற்பட்டது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாததால் மீண்டும் அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றனர்.
News September 30, 2025
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை சுகாதார பணிகள் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில், பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருபவர் பரணிதரன். இவர் நேற்றிரவு காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி, தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அதி வேகத்தில் சென்ற சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.