News September 7, 2025

கோவை: இந்த மெமு ரயில் மட்டும் ரத்து!

image

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போத்தனூரில் இருந்து இன்று (செப்.7) காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News September 7, 2025

கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை SHARE பண்ணுங்க!

News September 7, 2025

கோவையில் ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

image

கோவை வேளாண் இணை இயக்குனர் கூறுகையில், “கோவையில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையங்களை சிறப்பாக நடத்த வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் பெற்றதும், மானிய உதவிக்காக <>இங்கு கிளிக் <<>>செய்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News September 7, 2025

கோவை TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில், ஒருநாள் காளான் வளர்ப்பு பயிற்சி, (08.09.2025) அன்று நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.590 ஆகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!