News September 21, 2024

கோவை: ஆல்வின் மீது என்ன வழக்கு, ஏன் துப்பாக்கிச் சூடு?

image

கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆல்வின் இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். இந்த நிலையில் போலிசார் இன்று இவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 23, 2025

மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

News August 23, 2025

கோவையில் புது வித மோசடி! உஷார் மக்களே

image

கோவையில், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என அரசு கல்வித்துறை அதிகாரிகள் போல் பேசி, வீடியோ கால் மூலம் QR ஸ்கேன் செய்ய வற்புறுத்தி பல லட்சம் ரூபாய் ஆன்லைனில் பறித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெற்றோர் சைபர் கிரைமில் புகார் அளித்து உள்ளனர்.இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

News August 22, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!