News January 23, 2025
கோவை ஆட்சியருக்கு விருது

மக்களவை தேர்தல் பணி, கோவை மாவட்டத்தில் அமைதியாக நடந்தது. தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு விருது வழங்கப்படுகிறது. வரும், 25ல் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரவி, வழங்குகிறார்.
Similar News
News November 8, 2025
கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (15). இவர் நேற்று முந்தினம் இவரது சகோதரியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் விளையாட்டாக தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.
News November 7, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


