News October 23, 2025
கோவை அருகே விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்!

கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் கன்றுகுட்டி ஒன்று தவறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்தது. இதனை காப்பாற்றுவதற்காக விவசாயி நடராஜன் கிணற்றில் குதித்துள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக அவர் பலியானார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 23, 2025
கோவை: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

கோவை பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 23, 2025
கோவை: கல்வி கற்க கடனுதவி பெற அழைப்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி பயன்பெறலாம் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
News October 23, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், சின்ன குயிலி, இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.