News November 22, 2025

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் தனது டூவீலரில் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 13, 2026

நுரையீரல் நோய் காரணமாக தற்கொலை

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 12, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!