News August 26, 2024
கோவை அருகே விபத்து: ஒருவர் பலி

கோவை அடுத்த சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் தனது இருசக்கர வாகனத்தில் விளாங்குறிச்சி- சரவணம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் படுகாயமடைந்து இன்று உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் லாரி ஓட்டுநர் பால்துரை மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 18, 2025
கோவை ஏர்போர்டில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
News August 18, 2025
கோவை: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்கக்கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.