News December 7, 2025

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை இடையா்பாளையம் டிவிஎஸ் நகரை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ரியா(5). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்த நிலையில் காய்ச்சலால் சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் நேற்று முந்தினம் குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் பெற்றோர் சென்று பார்த்த போது, தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 11, 2025

கோவை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News December 11, 2025

கோவை: டிகிரி, டிப்ளமோ போதும்… DRDO-இல் வேலை!

image

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!