News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Similar News
News December 19, 2025
ஸ்தம்பிக்கும் கோவை! இங்கு செல்ல தடை

கோவை ஒப்பணக்கார வீதி நகைக்கடை, ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 19, 2025
கொடிசியா மைதானத்தில் கடற்கரை எக்ஸ்போ

கோவையில் கொடிசியா மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அற்புதப் பொழுதுபோக்கு நிகழ்வு (கடற்கரை எக்ஸ்போ) தொடங்குகிறது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கவுள்ளார். குடும்பத்தோடு பொழுதைப் போக்க சிறந்த இடமாக அமைந்துள்ள இந்நிகழ்வில், 250 அடி நீளக் கடற்கரை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.