News August 13, 2025
கோவை – அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவையிலிருந்து அந்தமானுக்கு, சிறப்பு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) அறிவித்துள்ளது. இது (செப்.23)ம் தேதி துவங்குகிறது. 6 இரவு, 7 பகல் அடங்கியது. விமான கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து, கப்பல் பயணச்சீட்டுகள், உணவு ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54,500 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, 90031-40655, www.irctctourism.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 13, 2025
கோவை: மத்திய அரசு வேலை வேண்டுமா?

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.21,700 முதல் 69,100 சம்பளம் வழங்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு கோவையில் நடைபெறும். <
News August 13, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.
News August 13, 2025
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் எம்பி ஆலோசனை

பொள்ளாச்சி சிடிசி மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வருமேப் பேருந்து நிலையமேப் வசதிகள் குறித்து எமேப்பி ஈஸ்வர சுவாமி தலைமையில் ஆலோசனை கூட்டமேப் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் அசோசியேட்ஸ் பிரைவேட் பஸ் ஓனர்கள் மற்றுமேப் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.