News July 7, 2025

கோவையில் VAO லஞ்சம் கேட்டால் உடனே CALL பண்ணுங்க

image

கோவை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0422-2449550 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News July 7, 2025

கோவையில் ஆவின் தலைமை இல்லாததால் நிர்வாகம் தடுமாற்றம்

image

கோவை ஆவின் நிறுவனம் 2 ஆண்டுகளாக பொது மேலாளர் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இந்த பிரச்சினைக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் ஊழியர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.

News July 7, 2025

பின்லாந்து நாட்டில் கோவை மாணவர்கள்

image

பின்லாந்து நாட்டில் டர்கூ பல்கலை சார்பில் 32வது சர்வதேச மாநாடு(இன்று) ஜூலை.7 முதல் 10 வரை நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறந்த பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்படி கோவை பாரதியார் பல்கலை தாவரவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பெனடிக்ட் மேத்யூஸ் பால் மற்றும் கவுதம் கண்ணன் ஆகியோர் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வாகியுள்ளனர்.

News July 7, 2025

சொந்த ஊரில் வேலை வேண்டுமா?

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 61 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<<16974303>>தொடர்ச்சி<<>>(1\2)

error: Content is protected !!