News November 26, 2025
கோவையில் OPS -க்கு ஆயுர்வேத சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். அப்போது, பேசிய ஓபிஎஸ் பேச வேண்டியதை எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என்றார். பின், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார்.
Similar News
News December 1, 2025
கோவை: செருப்படி ஓடை பற்றி தெரியுமா?

கோவை மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி ராமநாதபுரம் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் ஓடையே, முன்பு ஒரு காலத்தில் செருப்படி ஓடை என அழைக்கப்பட்டது. முன்பு இந்த ஓடையில் கொள்ளையர்கள் இருந்தார்களாம். அவர்கள் இந்த ஓடை வழியாக செல்லும் வண்டிகள், மணலில் சிக்கிக்கொள்ளும்போது, செருப்பால் மக்களை தாக்கி, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பரித்து செல்வார்களாம். இதனால் இந்த ஓடைக்கு செருப்படி ஓடை என பெயர் வந்தது.
News December 1, 2025
கோவை: மனைவியை கொன்று What’s App-ல் ஸ்டேட்டஸ்!

நெல்லையை சேர்ந்த பாலமுருகன் கோவையில் தனியார் தங்கும் விடுதியில் இருந்த மனைவி ஸ்ரீபிரியாவை நேற்று தனியார் விடுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அங்கிருந்த நாற்காலியில் கால் போட்டு அமர்ந்து செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் துரோகத்தின் சம்பளம் மரணம் என வைத்துள்ளார். போலீஸ் வரும் வரை அங்கேயே இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.


