News January 26, 2026
கோவையில் வைரல் ஆகும் பேனர்!

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
Similar News
News February 18, 2026
கோவை: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 18, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

கோவை–ஜெய்ப்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவையிலிருந்து வியாழக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் (06181), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை ஜெய்ப்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு புதன்கிழமை கோவையை வந்தடையும். கோடைக்கால பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 04222-642388 என்ற எண்ணை அழைக்கலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


