News August 2, 2024
கோவையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
கோவை: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். NPCI என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க.
News December 26, 2025
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எஸ்.எஸ். தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


