News September 27, 2025
கோவையில் ரேபிஸ் பரவலா? உண்மை என்ன!

கோவை மாவட்டத்தில் 25 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி முழுவதுமாகப் போலியானது ஆகும்.நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.SHAREit
Similar News
News January 31, 2026
கோவை: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
கோவை அருகே குவிக்கப்படும் போலீஸ்

நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை முருகன் கோவிலில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். துணை கமிஷனர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் தேரோட்டத்திற்கும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
News January 31, 2026
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம்–திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக பயணிகள் பயன்படுத்தி வரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து, திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் இயக்கப்படும். பல முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.


