News November 18, 2024

கோவையில் ரூ.6.72 கோடி கடன்: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) வாயிலாக 590 பயனாளிகளுக்கு ரூ.6.72 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் டாம்கோ வாயிலாக மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பில் தனிநபர் கடன்களும், 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழு கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2024

பெண் எஸ்பிக்கு மிரட்டல்: கோவை விசிக தலைவர் கைது

image

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை, செல்போனில் அழைத்து தகாத வார்த்தையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் அசோக் குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

கோவையில் சர்வதேச கார் பந்தய மைதானம் ரெடி

image

கருமத்தம்பட்டி அருகே ரூ.50 கோடி மதிப்பீட்டில் 111 ஏக்கரில் பாதுகாப்பு அம்சங்களுடன், அதிவேகம், தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட சோதனைகளுக்கு ஏற்ற சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை இதில் பயிற்சி பெறலாம் என டிராக் ஹெட் விசால் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2024 க்குள் விண்ணப்பித்துக் எல்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.