News September 4, 2025
கோவையில் ரூ.38 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த விஷ்ணுப்ரியா (29) அளித்த புகாரின் பேரில், போலி நிதி முதலீட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி 2018 முதல் விமலாதேவி என்ற பெண், வார மாத தவணை முறையில் முதலீடு பெற்றதாகவும், மொத்தம் ரூ.63 லட்சத்தில் ரூ.25 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கி, ரூ.38 லட்சம் வழங்காமல் ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து தற்போது விசாரிக்கின்றனர்.
Similar News
News September 4, 2025
கோவை: EB துறையில் 1794 பணிகாலியிடங்கள்!

கோவை மக்களே.., தமிழ்நாடு EB துறையில் காலியாக உள்ள 1794 எலக்ட்ரீஷியன், வயர் மேன், கள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10th, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற நவ.16ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க <
News September 4, 2025
கோவை: EB துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️EB துறையில் அறிவிக்கப்பட்ட 1794 பணிகாலியிடங்களுக்கு https://www.tnpsc.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
▶️இதற்கு விண்ணப்ப கட்டணம் என மொத்தமாக ரூ.450 செலுத்த வேண்டும்.
▶️முக்கியமாக இதற்கு உங்களது 10th அல்லது 12th சான்றிதழில் நீங்கள் பிறந்த தேதி சரியாக இருத்தல் வேண்டும்.
▶️இல்லையெனில் TC, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 4, 2025
மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: அரசு மருத்துவக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். இசிஜி, டயாலிசிஸ், சுவாச சிகிச்சை, அவசர சிகிச்சை, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் உள்ளிட்ட 10 மருத்துவ தொழில்நுட்பப் பிரிவுகளில் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றார்.