News October 26, 2024
கோவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்

கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தெலுங்கானா, குஜராத், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, டையு, டாமன் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தில் சேருவதற்கு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் அறிவித்துள்ளது.
Similar News
News February 11, 2026
கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இருகூர் – போத்தனூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு ₹277.42 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 31.2 லட்சம் டன் சரக்குகளைக் கையாள முடியும். மேலும், கூடுதலாக 15 ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால், 2027-28-க்குள் கோவையின் போக்குவரத்துத் திறன் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 11, 2026
கோவையில் வசமாக சிக்கிய பெண் அதிகாரி!

கோவை வடக்கு வணிகவரித்துறை உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி (48). சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 60,000 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது கணவர் தனசேகரன் (51) மூலம் பெற முற்படும் போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். இதனை தொடர்ந்து கணவன் -மனைவி இருவரையும் போலீசர் கைது செய்தனர். கோவையில் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் அரசு 0422-2449550.
News February 10, 2026
கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

கோவை மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


