News April 24, 2025
கோவையில் ரயில் சேவைகள் மாற்றம்

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில், ரயில் சேவையில் மாற்றம், அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு ரயில் மதியம் 13.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும் என்றனர்.
Similar News
News April 25, 2025
கோவை வந்த துணை குடியரசு தலைவர்

ஊட்டியில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவைக்கு விமான மூலம் வந்தார். அப்போது அவரை கோவை விமான நிலையத்தில், எம்.பி கணபதி பா.ராஜ்குமார், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
News April 25, 2025
BREAKING: கோவையில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா சென்ற சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியை சேர்ந்த பிசியோதெரபி மாணவர்கள் தருண், ராவத், ஆண்டோஜெனிப் ஆகியோர் ஆழியார் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 25, 2025
கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு

தமிழக அரசு சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் மே.1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டங்களில் கடந்த ஆண்டின் வரவு, செலவு கணக்குகளை மக்கள் முன் பார்வைக்காக வைக்கவும், தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.