News April 20, 2025

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

image

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

சூலூர்: வைத்தியநாதர் கோயில்

image

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை. SHARE IT!

News July 5, 2025

குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: ஈஸ்வரன்

image

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று இருகூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மரணம் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயல். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு சில காவலர்களின் தவறுகளால் மொத்த காவல்துறை, அரசு, முதலமைச்சருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றார்.

News July 5, 2025

வங்கியில் வேலை! நல்ல சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!