News June 16, 2024
கோவையில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கோவை மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 3, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
கோவை: ரூ.15 லட்சம் வரை கடன் வேனுமா?

கோவை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 2, 2026
நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நாளை (மார்ச்.3) காலை 11:00 மணியளவில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


