News August 18, 2024
கோவையில் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 27, 2025
கோவை: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)
News October 27, 2025
கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய குடியரசு துணை தலைவர் இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனால் கோவை மாவட்டத்தில் இன்று 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
News October 27, 2025
கோவை: ரயில்வேயில் வேலை! APPLY NOW

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


