News August 15, 2024
கோவையில் பிரபல நடிகர் சாமி தரிசனம்

கோவை, மருதமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகரை கண்ட பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையிலும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.
Similar News
News November 7, 2025
கோவை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
News November 7, 2025
கோயம்புத்தூர்: யூடியூபருக்கு சிறை

முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி அண்மையில் Ex.அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவர் கரூர் சம்பவம் குறித்து ஏஐ மூலம் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திக் என்பவர் வைஷ்ணவிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 6, 2025
கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.


