News December 14, 2025
கோவையில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

கோவை, இடையபாளையம் பழனியம்மாள் லே-அவுட் பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில், தடாகம் சாந்தாமணி கேஜி புதூர் பிரிவு பத்மாவதி (27,) மருதமலை அண்ணாநகர் எலிசபெத் ராணி (30), சிங்காநல்லூர் சாந்தி (40) என தெரியவந்தது. கைது செய்த பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News December 16, 2025
கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 15, 2025
கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (15.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


