News October 26, 2025
கோவையில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

கோவை சாயிபாபா காலனி காமராஜர் வீதியில் உள்ள வாடகை வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கோவை சாயிபாபா காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று சோதனை நடத்தினர். இதில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சுஷி (48) மற்றும் கர்நாடகா கோலாரை சேர்ந்த தீபா (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 2, 2026
BREAKING: வால்பாறை அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

பழனியிலிருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திரும்பியபோது, எதிரே வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்த பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். இவ்விபத்தின் காரணமாக அந்த மலைச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News February 2, 2026
கோவை: ரூ. 1 லட்சம் சம்பளத்தில்.. வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 2, 2026
கோவை: உங்க போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


