News March 31, 2024
கோவையில் பாதிரியர்கள் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு பணியாற்றிய சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய பாதிரியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தின் உள்ளே திடீரென வந்து கதவு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து சூறையாடினர். பின் நேற்று அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பாதிரியர்களை கைது செய்தனர்.
Similar News
News February 14, 2026
கோவை: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

கோவை மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும்<
News February 14, 2026
கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டு நிறைவு

1998-ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவை மாநகரின் 12 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 56பேர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அல்உம்மா அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இவ்வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்தது.
News February 14, 2026
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


