News December 22, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி லோடு, டிபி ரோடு ஒரு பகுதி, சுக்ரவார்பேட்டை ஒரு பகுதி, இபி காலனி, சொக்கம்புதூர், ராஜவீதி, பெரிய கடை வீதி, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டம்பட்டி, ஜே.கிருஷ்ணபுரம், நெகமம் வடசித்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 27, 2025
கோவை: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News December 27, 2025
கோவை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை கலெக்டர் பவன்குமார் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் அல்லது திருத்தம் செய்ய டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள 3,563 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்துமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


