News September 3, 2025

கோவையில் செப்.11-ல் மாபெரும் கல்விக் கடன் முகாம்!

image

கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம், வரும் செப்.11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பீளமேடு பிஎஸ்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே பான், ஆதார், மதிப்பெண் பட்டியல், வங்கி விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுளளது. SHARE பண்ணுங்க!

Similar News

News September 3, 2025

கோவை: பாலமலை அரங்கநாதர் கோயில்!

image

கோவை, கோவனூரில் உள்ள பாலமலை என்ற, இயற்கை எழில் கொஞ்சும் மலையில் அரங்கநாதர் வீற்றிருக்கிறார். இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக அமர்ந்துள்ள அரங்கநாதர், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வல்லமை கொண்டவர். மாங்கல்ய வரம், குழந்தை வரம் வேண்டுபவர்கள், அரங்கநாதரை சனிக்கிழமைகளில் சென்று வழிபட்டு, ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தால், வேண்டுதல்கள் நிறைவேறுமாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 3, 2025

மேட்டுப்பாளையம் ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது!

image

ஆண்டுதோறும் செப்.5 ஆம் தேதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News September 3, 2025

கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!