News August 3, 2024
கோவையில் கொடூர கொலை: அண்ணாமலை கண்டனம்

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயக்குமார் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக, அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். “தேசிய கட்சியின் மாநில தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை யார் உயிருக்கும் உத்தரவாதமில்லை. அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆனால், காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி (05.11.2025) அன்று நடைபெற உள்ளது. பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆகும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
BREAKING: கோவையில் சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவை விமான நிலையம் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, 3 பேர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். காயமடைந்த குணா, சதிஸ், கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News November 4, 2025
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (04.11.2025 மற்றும் 05.11.2025) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


