News November 23, 2025
கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
Similar News
News February 10, 2026
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
News February 10, 2026
மதுக்கரை: சாலை விபத்தில் தலை நசுங்கி பெண் பலி

மதுக்கரை மரப்பாலத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோடு இந்திரா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே அசுர வேகத்தில் திவாகர் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் நிலைதடுமாறி கிருஷ்ணவேணி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் கிருஷ்ணவேணியின் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
கோவை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)


