News September 5, 2025

கோவையில் ஒரு டீ ரூ.20, காபி ரூ.26: பொதுமக்கள் அதிர்ச்சி!

image

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பேக்கரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த சங்கத்துக்கு உட்பட்ட பேக்கரிகளில் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர். இதன்படி பேக்கரிகளில் இதுவரை ரூ.15 க்கு விற்கப்பட்டு வந்த டீயின் விலை ரூ.20 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்டு வந்த காபியின் விலை ரூ.26 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News September 7, 2025

கோவை: DRIVING தெரிந்திருந்தால் அரசு பணி!

image

கோவை மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE IT

News September 7, 2025

அட்வான்ஸ் புக்கிங்: 20 சவக்குழிகள் தோண்டப்பட்ட சம்பவம்!

image

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான அடக்கவிடத்தில், ஒரே நாளில் 20 குழிகள் தோண்டப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், “செடி, கொடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் வந்தது. அவர்கள் விரைவாக வேலையை முடித்ததால், வாடகை வீணாக போகிறதே என்று குழிகளை தோண்டினோம்,” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழிகள் மூடப்பட்டது.

News September 7, 2025

கோவை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

கோவை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!