News October 30, 2025
கோவையில் இலவச பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு இலவச “பழங்கள் மற்றும் காய்கறிகள் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல்” பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 26 வரை) நடைபெற உள்ளது. இதில் வயது 18-35, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 97911-77578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
கோவை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
பெண் வயிற்றில் இருந்து ஏழரை கிலோ கட்டி அகற்றம்

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி காரணமாக நீலகிரியை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதிக்க பட்ட நிலையில் மருத்துவமனை மருத்துவகுழுவினர் அப்பெண் வயிற்றில் இருந்து ஏழரை கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். இச்சிகிச்சையை 6-க்கும் மேற்பட்ட மருத்துவ குழு சுமார் 5 மணி நேரம் போராடி இதனை செய்தனர்.
News October 30, 2025
பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை) நடைபெறும். 12ஆம் வகுப்பு தகுதி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு swc@tnau.ac.in, 9789982772-ல் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.


