News September 8, 2025
கோவையில் இப்படியும் மோசடி! உஷார் மக்களே

▶️பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்களை ரத்து செய்வதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ₹18 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது.▶️கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. ▶️https என்று தொடங்கும் இணையதள முகவரியையே நாம் பயன்படுத்த வேண்டும் ▶️எச்டிடிபி (http) என்ற இணைதளம் போலியாகும் ▶️பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை. (SHARE பண்ணுங்க)
Similar News
News September 14, 2025
கோவை: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

கோவை மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 14, 2025
இந்திய-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய கோரி போராட்டம்!

சிவசேனா கட்சி சார்பில் இன்று கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் மா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும், நாளை நடைபெற உள்ள இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
News September 14, 2025
கோவையில் சோகம்: ரயில் மோதி இளைஞர் பலி!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரி பாளையம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 முதல் 30 வயது வரை வரை உள்ள இளைஞர் ஒருவர் ரயில் அடிபட்டு இறந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.