News March 28, 2025
கோவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு

கோவை மாவட்டத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 19,509 மாணவர்களும்,19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் தனித் தேர்வுகள் 1,211 மாணவர்கள் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 518 பள்ளிகளில் 158 தேர்வு மையங்களில் இந்த பொதுத் தேர்வானது நடைபெறுகிறது. 220 பறக்கும் படையினர் மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 31, 2025
BREAKING: பொள்ளாச்சியில் தம்பதி தற்கொலை

கோவை வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி, வினோபா தம்பதி. இவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மாக்கினம்பட்டியில் மைத்துனர் நடத்திய ஹோட்டலை கார்த்தி தனது மனைவியுடன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொழிலில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தகவல் வந்துள்ளது.
News March 31, 2025
கோவை – அபுதாபி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அபுதாபி – கோவை – அபுதாபி விமான சேவை நேற்று முதல் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.
News March 31, 2025
மருதமலைக்கு வாகனங்களில் செல்ல தடை

கோவை மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஏப்.1 மாலை 5 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே வரும் (ஏப்.4-6) வரை மலை மீது வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.