News August 15, 2025

கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Similar News

News March 4, 2026

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்க, ஏப்ரல் 2026 முதல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.6 கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் பால் பண்ணை தொழிலை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பால் உற்பத்தியாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

News March 3, 2026

கோவை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!