News July 6, 2025
கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அப்துல் ஜபார் இறந்து 6 நாள்கள் ஆனதை உறுதிசெய்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது, எலி இறந்து வாடை வருவதாக நினைத்தேன் என்றார். கணவன் இறந்தது கூட தெரியாமல், மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 22, 2025
கோவை: இதை செய்தால் புகார் அளிக்கத் தயங்காதீர்கள்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதே போல் உங்களிடம் ஏதேனும் அரசு அதிகாரிகள் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கேட்டல் 0422-2449550 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த முக்கிய எண்ணை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
News August 22, 2025
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)