News March 30, 2025

கோவையில் அதிரடி நடவடிக்கை!

image

கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை, மற்றும் வீடு புகுந்து திருட்டு ஆகிய வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, கைது செய்ய 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படைகள் நேற்று கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உட்கோட்டங்களில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 73 நபர்களை, காவல்துறையினர் கைது செய்தனர் என்றார்.

Similar News

News April 1, 2025

கோவை நிலுவை வரியை வசூலிக்க கமிட்டி

image

கோவை மாநகராட்சியில் சொத்து வரி ₹129.43 கோடி உட்பட மொத்தமாக பல்வேறு வரிகளில் ₹667.77 கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலுவை வரியினங்களை ஆய்வு செய்வதற்கும், வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து வசூலிப்பதற்கு சிறப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

1 மாதத்தில் 28 பேர் மீது குண்டாஸ் 

image

கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக சரவணசுந்தா் பொறுப்பேற்ற பிறகு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநகரில் ரௌடிகளை ஏ பிளஸ், ஏ, பி என 3 வகைகளாக பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 28 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சரவணசுந்தர் நேற்று தெரிவித்தார்.

News April 1, 2025

கோவை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது புகார் அளிக்க 94981-81212, 7708-100100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!