News May 15, 2024
கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை

கோவை மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி அதிகபட்ச வெப்பநிலை 34 – 38 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமும், மாலை நேரம் 40 சதவீதமாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 – 8 கி.மீ.,வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது
Similar News
News August 21, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
TNAU துணை இணையவழி விண்ணப்பம் தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கான துணை இணையவழி விண்ணப்பங்கள் இன்று (21.08.2025) முதல் 29.08.2025 வரை பெறப்படுகின்றன. மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் http://tnau.ucanapply.com என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தரவரிசைப்பட்டியலில் இடம் பெறுவோர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
News August 21, 2025
2300 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை.!

கோவை மாவட்டத்தில் 2300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளில் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். நாடு முழுவதும் வருகிற 27ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புறநகரில் உள்ள 1600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.