News April 4, 2025
கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News April 9, 2025
பிஎம் இன்டர்ன்ஷிப் பயிற்சி: ரூ.5,000 உதவித்தொகை

பிஎம் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச்.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஏப்.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10, 12, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ முடித்த இளைஞர்கள் பயன்பெறலாம். இதில் தேர்வாவோருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் (அ) 9566531310 எண்ணை அழைக்கலாம்.
News April 9, 2025
ட்ரோன் பறக்க தடை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகையை முன்னிட்டு சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் 10 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு சூலூரில் இருந்து வெலிங்டன் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2025
மருதமலைக்கு காரில் செல்லகூடாது

மருதமலைகோவிலுக்கு நாளை(ஏப்.10) முதல் 14ஆம் தேதி வரை பக்தர்கள் வாகனங்களில் வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை முதல் பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். இதனால், மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் வாயிலாகவும், மலைப்படி வழியாகவும் வரலாம். (SHARE பண்ணுங்க)